Saturday, March 29, 2014

தமிழ்சினிமாவில் அரசியல் என்றொரு கட்டுரை எழுதினால், அது ஒரு பரபரப்பான சினிமா பார்ப்பதை போன்றொரு உணர்வை தரும். அதுவும் ஒரு அரசியல்வாதியின் மகனுக்கே அரசியல் வகுப்பு எடுக்கிற அளவுக்கு நயன்தாரா தேறியிருக்கிறார் என்றால் அதை என்னவென்று சொல்வது?

நயன்தாராவும் உதயநிதியும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் படம் நண்பேன்டா. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பதினைந்து நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. அதற்கப்புறம் ஷுட்டிங்குக்கு போகாமல் நிற்கிறார்கள். காரணம்? நயன்தாராவாம். ஏன்? அவர் கால்ஷீட் கொடுத்தால்தானே படப்பிடிப்புக்கு போக முடியும்? ஆனால் அவரோ அதுபற்றிய எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாராம். இந்த படத்தை அவர் கைப்பற்றியதே தனிக்கதை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

முதலில் உதயநிதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்ததல்லவா? அதை கேள்விப்பட்ட நயன்தாரா வலிய சென்று உதயநிதியை சந்தித்தார். நண்பேன்டா படத்தில் நான் ஹீரோயினா நடிக்கிறேன். உடனே ஷுட்டிங்கை ஆரம்பிங்க. கால்ஷீட் உடனே தர்றேன் என்று கூறிவிட்டார். இவர் உடனே கால்ஷீட் தந்ததில் இரண்டு மாங்காய் விழுந்தது. ஒன்று... காஜல் அகர்வாலின் ஒரு படத்தை காலி பண்ணியது. மற்றொன்று... இது கதிர்வேலன் காதல் ஓடவில்லை. ஓடாத ஒரு படத்தின் ஜோடியை மறுபடியும் ரிப்பீட் பண்ண நினைக்கும்போது நடுவில் புகுந்து குட்டையை குழப்பவென்றே ஆயிரம் பேர் முளைப்பார்கள். உடனே கால்ஷீட் கொடுத்து படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டால் அந்த முயற்சியும் பலிக்காது. இந்த இரண்டு மாங்கா திட்டத்தில் வெற்றியும் பெற்றுவிட்டார் நயன்தாரா.

பதினைந்து நாள் முடிந்த படத்திலிருந்து இனி நயன்தாராவை யாரும் நீக்கப் போவதில்லை. இந்த பதினைந்து நாள் கால்ஷீட்டை வேறொரு படத்திலிருந்து பிய்த்துக் கொடுத்தாரல்லவா? அந்த படத்திற்காகதான் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறாராம். அப்படியே நான்கு தெலுங்கு படங்களில் நடிக்கவும் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். நண்பேன்டா என்னாகும்? அது நயன்தாராவின் கையிலும்தான் இருக்கிறது.

4tamilmedia

0 comments :

Post a Comment

 
Toggle Footer