Monday, March 24, 2014

தமிழ்த்திரையுலக ரசிகர்களாலும், தமிழ்த் திரையுலக ஜாம்பாவான்களாலும் மிகவும் பாராட்டப்பட்ட கோலிசோடா திரைப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் அடுத்ததாக விக்ரம் நடிப்பில் படம் இயக்குவதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து விஜய் மில்டன் பேசிய போது “நான் ஏ.ஆர்.முருகதாஸிடம் மூன்று கதைகளைச் சொன்னேன். அவருக்கு மூன்று கதைகளுமே பிடித்துவிட்டதால் என் படத்தை தயாரிக்க அவர் ரெடி என்று கூறிவிட்டார். பிறகு விக்ரமிடம் ஒரு கதையைச் சொன்னேன். அவருக்கும் அந்த கதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் படத்தில் நடிப்பது குறித்த ஒப்பந்தங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படவில்லை” என்று கூறினார். விஜய் மில்டன் தற்போது பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருக்கிறார். விக்ரமும் ஷங்கரின் ’ஐ’ படத்தின் கடைசி கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer