Wednesday, March 26, 2014

மலேசிய விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவன பெண் நிர்வாகி சந்திரிகா சர்மாவும் மரணமடைந்துள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ம் திகதி அதிகாலை சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய விமானம், மாயமானது.

16 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த விமானத்தில் இருந்த 239 பயணிகளும் ஜலசமாதியாகிவிட்டனர். அவர்களில் 5 இந்தியர்களும் அடங்குவர்.

இதில், விபத்துக்குள்ளான விமானத்தில் சென்னையைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மா (50) என்பவரும் சென்றுள்ளார். சென்னை வேளச்சேரியில் வசித்த சந்திரிகா ஷர்மா, இன்டர்நேஷனல் கலெக்டிவ் இன் சப்போர்ட் ஆப் பிஷ்ஸ் ஒர்க்கர்ஸ் (ஐசிஎஸ்எப்) என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றியவர்.

ஐ.நா. அமைப்பான உணவு மற்றும் வேளாண் நிறுவனம் மங்கோலியாவில் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பசிபிக் நாடுகளுக்கான சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.

தற்போது, சந்திரிகாவின் மரணம் பற்றிய தகவல் அறிந்த உடன் அவரது கணவரும், மகளும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். என்னால் இந்த தகவலை நம்ப முடியவில்லை என்று அவருடைய கணவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer