Wednesday, March 26, 2014

பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் திரைப்படத்தில் ஜெயம் ரவி - ஹன்ஸிகா ஜோடிக்கு இருந்த கெமிஸ்ட்ரி அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியதல்ல. ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசக்கூடிய இந்த ஜோடி அடுத்ததாக இணைவது ரோமியோ - ஜூலியட் திரைப்படத்தில் தான்.

லக்‌ஷ்மன் இயக்கும் இத்திரைப்படத்தை மச்சக்காரன், நியூட்டனின் மூன்றாம் விது திரைப்படத்தை தயாரித்த S.நந்தகோபால் தயாரிக்கிறார். டி.இம்மானின் இசையில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தின் ஃபோட்டோஷூட் சமீபத்தில் நடந்தது. ஜெயம் ரவி - ஹன்ஸிகாவின் குறும்புத்தனமான ரொமான்ஸில் படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட அதிகமாக பொருந்துகிறார்களாம் இருவரும்.

nakkheeran

0 comments :

Post a Comment

 
Toggle Footer