Saturday, March 29, 2014

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘இனம்’ திரைப்படத்தைப் பார்த்த திரையுலக முக்கிய கலைஞர்கள் பலரும் வாழ்த்திவருகின்றனர்.

இனம் படம் பற்றி ஆர்.கே.செல்வமணி

சந்தோஷ்சிவன் என் இனம் எப்படி அழிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார். அந்த இன அழிப்பு துயரங்களை கொடுமைகளை ஒரு சதவிகிதம் தான் காட்டியிருக்கிறார். அதுவே இவ்வளவு கொடுமையாக தெரிகிறது. படத்தில் சொல்லப்படாதவை எவ்வளவோ இருக்கின்றன.

கருணாஸ் பாத்திரம் மிக அற்புதமாக உள்ளது. இங்கே சரியான புரிதல் இல்லாமல் அறிவில்லாமல் பேசுகிற பல முட்டாள்களுக்குப் பதிலாக அந்த பாத்திரம் இருக்கும். கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ‘என் குடும்பத்தை காப்பாற்ற நான் எதையும் செய்வேன்’ என்கிற அந்த வசனம் தான் இலங்கையில் தன் குடும்பத்தை, இனத்தை காப்பாற்ற எதையும் செய்ய வேண்டிய சூழலில் சிக்கியிருக்கும் தமிழர்களின் போராட்டம்

இனம் படத்தை வெளியிடும் இயக்குனர் லிங்குசாமி

இனம் படத்தைப் பார்த்தோம், பிடித்தது வெளியிடுகிறோம். இதில் வேற எந்த வியாபாரக் கணக்கும் இல்லை. படத்தின் மூலம் இரண்டு சொட்டு  கண்ணீர் போதும் அதுதான் எதிர்பார்ப்பு கணக்கு

இயக்குனர் பாலாஜி சக்திவேல்

“இனம்” ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அற்புதமான பதிவு. இதில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. சாதாரண கண் கொண்டு இப்படத்தை பார்க்க வேண்டாம். நெஞ்சில் ஏந்திப் பாருங்கள்

நடிகர் சித்தார்த்

ஐம்பது நூறு ஆண்டுகளில் மனித இனம் கண்டறியாத மனிதப் படுகொலை இன அழிப்பு தான் இலங்கையில் நடந்தது. அது மனித நாகரிகம் இதுவரை காணாத இனப்படுகொலையாகும். அதைப் பற்றி பேசுகிற இந்த படத்தை அரசியல் படமென்று யாரும் சிறுமைப் படுத்திவிட வேண்டாம். கசப்பான உண்மைகளை உலகமே கைகட்டி நிற்கும் இந்த சூழலில் எடுத்திருக்கிறார். அனைவரும் பார்க்க வேண்டிய உணர்ச்சிகரமான முக்கியமான நல்ல படம்  “இனம்”

0 comments :

Post a Comment

 
Toggle Footer