Tuesday, March 25, 2014

மேஷம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

ரிஷபம்
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். உற்றார், உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். தந்தை வழியில் தனலாபம் ஏற்படும்.

மிதுனம்
காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். ஒருமுறைக்குப் பலமுறை எதையும் யோசித்துச்செய்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் ஏற்படலாம்.

கடகம்
முன்னேற்றம் கூடும் நாள். வாழ்க்ககைத் துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து சேருவர்.

சிம்மம்
அந்தஸ்து உயரும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

கன்னி
வளர்ச்சி கூடும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். பூர்வீக சொத்துத் தகராறு அகலும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும்.

துலாம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வாகன யோகம் உண்டு.

விருச்சகம்
வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏறும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். சேமிப்பு உயரும். செல்வாக்கு மிக்கவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்வர். தொழில் வளர்ச்சி கூடும்.

தனுசு
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். எதிர்காலம் இனிமையாக அமையத் திட்டங்கள் தீட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர்கள்.

மகரம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். முயற்சிகளில் சிறு தடை ஏற்பட்டு விலகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளைச் சேர்க்க முன்வருவீர்கள்.

கும்பம்
உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும் நாள். பயணத்தால் புதியவர்களின் சந்திப்பு கிடைக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.

மீனம்
யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும். அன்னிய தேசப் பயணம் எண்ணியபடி கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer