Thursday, February 20, 2014

கொலிவுட்டில் உருவாகும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் விமல்- சூரி இணைந்து மீண்டும் கலக்கவுள்ளனர்.

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை ஆகிய படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன்.

இவர் தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் விமல்- சூரி நடிக்கின்றனர், கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

டி.இமானின் இசையில் உருவாகும் இப்படத்தை, குளோபல் இன்போடெயின்ட்மெண்ட் நிறுவனம் மூலம் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் இரயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் கண்ணன்.

முதல் பாதி வரை இரயிலிலும், இரண்டாம் பாதி கார் பயணம் என ஆக்ஷன், காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகிறதாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் இயக்குனர் கண்ணன், நடிகர் சூரி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை வரும் ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


0 comments :

Post a Comment

 
Toggle Footer