இப்போதிருக்கிற ஹீரோக்கள் பஞ்சத்தில் ஆள் கிடைத்தால் போதும் என்று அலைய ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
கதை நன்றாக இருந்தால் போதும். யார் ஹீரோவாக இருந்தாலும் அந்த படத்தை கரை சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் அண்மையில் ஹிட்டடித்த சில புது ஹீரோக்கள். சுந்தபாண்டியன் படத்தில் சில சசிகுமார் நண்பராக நடித்த இனிகோவுக்கே இப்போது கைவசம் ஐந்து படங்கள் இருக்கிறதாம். இப்படி பிரபல ஹீரோக்களுக்கு நண்பராக வந்தவர்களையே விடாமல் விரட்டிக் கொண்டிருக்கும் கோடம்பாக்கத்தில் ஒருவரை கண்டால் மட்டும் ஓடி ஒளிய ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அவர்...? வெங்கட்பிரபுவின் பிரதர் பிரேம்ஜி.
இத்தனைக்கும் பிரேம்ஜி திரைக்கு வந்தால் யூத்துகள் சிரிக்கிறார்கள். அவர் பேசும் ஒப்புக்கு உதவாத டயலாக்குகள் கூட வேல்யூ நிரம்பியவையாக இருக்கிறது. இருந்தாலும்... ? இந்த பின்னடைவுக்கு என்ன காரணம்? இவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்த பாக்யராஜ் 2010 என்ற படம் அப்படியே நிற்கிறது. இத்தனைக்கும் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்தே விட்டதாம். சரி, இது சோனா பிரச்சனை. அதற்கு பிரேம்ஜி என்ன செய்வார் என்று சமாதானமானவர்கள் அதற்கப்புறம் பிரேம்ஜிக்கு கொடுத்த வாய்ப்புதான் மாங்கா என்ற படம்.
இந்த படத்தின் துவக்க விழாவே தடபுடலாக ராணி சீதை ஹாலில் நடந்தது. மந்திர மேளங்கள் முழங்க நடத்தப்பட்டது பூஜை. அதே வேகத்தில் படமும் வளர்ந்தது. என்னாச்சோ தெரியவில்லை. அதில் இரட்டை வேடத்தில் நடித்த பிரேம்ஜியின் ஒரு வேடத்தை முழுக்க எடுத்து முடித்துவிட்டார்கள். இரண்டாவது வேடத்திற்கு பிரேம்ஜி தயாராக இருந்தாலும் படத்தை தொடர தயாரிப்பாளர் தயாராக இல்லை. பலமுறை படக்குழுவினரிடம் பேசி பார்த்து ஓய்ந்துவிட்ட பிரேம்ஜி, நான் படங்களுக்கு மியூசிக் பண்ண போறேன். அப்புறம் கூப்பிட்டா வர மாட்டேன் என்றெல்லாம் அச்சுறுத்தியும் நோ ரெஸ்பான்ஸ்.
பிஞ்சிலேயே பழுத்த மாங்காவுக்கு எந்த மார்க்கெட்லதான் கடை கிடைக்கும்?
Thursday, December 26, 2013
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment