Monday, December 30, 2013

தனது குரலால் ஒரு மக்கள் திலகத்தையும், ஒரு நடிகர் திலகத்தையும் படைத்த குரலுக்கு சொந்தக்காரர்.

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகை தனது இசையால் வசமாக்கிய மேதை.

பாட்டும் நானே.. பாவமும் நானே.. என்று பாடி நான் அசைந்தால் அசையும் உலகே என்று இசையால் உலகையே கட்டிப்போட்டவர்.

டி.எம்.எஸ் பாடினால் ஒரு நடிகன் திரையில் நடிக்க வேண்டிய அவசியமே கிடையாது, அவருடைய குரலில் உள்ள பாவங்கள் நடிகனை நடிக்காமலே நடிக்க வைத்துவிடும்.

கிராபிக்ஸ், 3 டி என்று இன்று தொழில் நுட்பத்தால் சினிமாவின் தயாரிப்பு அபார வளர்ச்சி பெற்றுவிட்டது இருந்தாலும் டி.எம்.எஸ் குரலால் சினிமாவுக்குக் கொடுத்த அருவமான பெறுமானத்தை இன்றைய தொழில் நுட்பத்தால் எட்டித்தொட முடியவில்லை.

சிவாஜியின் குரலிலும், எம்.ஜி.ஆரின் குரலிலும் பாடி இரு வேறு பரிமாணங்களை ஏற்படுத்தியவர், அதுதவிர நான்கு முதல் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு தொடர்ந்து பாடியவர்.

தானே பட்டினத்தார், அருணகிரிநாதர், கல்லும் கனியாகும் போன்ற திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தவர்.

தமிழ் திரையுலகில் தமிழின் பொருளுனர்ந்து அவர் கொடுத்த குரலை இன்றுவரை எட்டித்தொட யாராலும் முடியவில்லை.

நல்ல சொற்களை பாடலில் சேர்க்க வேண்டும் என்பார், நானொரு ராசியில்லா ராஜா என்ற பாடலைப் பாடியதோடு தனது வீழ்ச்சி ஆரம்பித்தது என்று கூறுவார்.

ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது, ஆனந்தம் இன்று ஆனந்தம், ஹேப்பி இன்று முதல் ஹேப்பி, வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், பொன் அந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு என்று அவர் கொடுத்த ஆனந்த வரிகளில் சிகரங்களைத் தொட்டனர் நடிகர்கள்.

டி.எம்.எஸ்சையும் அழைத்துச் சென்றது இந்த ஆண்டு.


0 comments :

Post a Comment

 
Toggle Footer