Sunday, December 15, 2013

நடிகை காம்னாவுக்கு ரகசிய திருமணம் நடந்ததாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதயத்திருடன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். ஜீவனுடன் மச்சக்காரன், லாரன்சுடன் ராஜாதி ராஜா, போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் அவருக்கு படங்கள் குறைந்தன. புதுமுக நடிகைகள் வரத்தால் தமிழ், தெலுங்கு பட உலகினர் அவரை ஓரம் கட்டினர். இதையடுத்து அவர் அவசரமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. </p>
<p>மாப்பிள்ளை பெயர் சுராஜ்.

பெங்களூரில் தொழில் அதிபராக இருக்கிறார். இருவருக்கும் நீண்ட நாட்களாக காதல் இருந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் சம்மதம் பெற்றும் இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணத்துக்கு திரையுலகினரை அழைக்கவில்லை. காம்னாவுக்கு நெருங்கிய தோழிகளான இரண்டு கதாநாயகிகள் மட்டும் கலந்து கொண்டார்களாம். ரகசிய திருமணத்தை அதிகாரப்பூர்வமாக எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.


0 comments :

Post a Comment

 
Toggle Footer