Tuesday, December 24, 2013

நடிகை ஹன்சிகா விடுமுறையை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளார்.

அவருடன் தோழிகளும் சென்றுள்ளனர்.

இந்த தோழிகள் ஹன்சிகாவுடன் தொடக்க பள்ளியில் இருந்து ஒன்றாக படித்தவர்கள் சொந்த செலவில் அவர்களை அழைத்து சென்றுள்ளனர்.

நியூயார்க்கில் அபார்ட் மென்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ஹாலிவுட் ஸ்டுடியோவை சுற்றி பார்க்கிறார்கள்.

ஒரிரு வாரங்கள் அங்கு இருந்து விட்டு மும்பை திரும்புகிறார்கள்.

ஹன்சிகா தற்போது அரண்மனை, மான்கராத்தே படங்களில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்து வந்தனர்.

இதனை இருவருமே அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

தற்போது காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் பரவி உள்ளன.

சிம்புவும் நயன்தாராவும் புதுப்படமொன்றில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர்.

இதன் படிப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜனவரி) 6–ந் தேதி சென்னையில் நடக்கிறது.

அப்போது இருவரும் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து பேச உள்ளனர்.

இதுவும் ஹன்சிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


0 comments :

Post a Comment

 
Toggle Footer