Friday, December 27, 2013

விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘நான்தான் பாலா’ திரைப்படம் வெகுவேகமாக உருவாகிவருகிறது. வேறு எந்த ஹீரோவும் இல்லாமல், முக்கியகதாபாத்திரத்தில் நடித்தாலும், இந்த படத்திற்கு நான் ஹீரோ இல்லை கதை தான் ஹீரோ என்று சொல்லி இப்படத்தில் கதைக்கான முக்கியத்துவத்தை உணர்த்தினார் விவேக்.

நான்தான் பாலா திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல பிரம்மாண்ட கலைஞர்களை வரவழைக்க திட்டமிட்டிருக்கிறார் விவேக்.

மணிரத்னம் வருவது குறித்து பேசியபோது “ மணி சார் என் காமெடிகளை விரும்பிபார்ப்பவர். நான் ஃபோன் செய்து கேட்டதும் அவரது முன்பை ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு நிகழ்ச்சிக்குவருவதாக ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேசிய விவேக் “சில மாதங்களுக்கு முன்பு நான் நடத்திய மரன்னன்றுகள் நடும் விழாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வருவதாக கூறியிருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அது நடக்கவில்லை. எனவே நான் அடுத்தமுறை நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் வருகிறேன் என்று கூறியிருந்தார். அந்த நம்பிக்கையில் ஒரே ஒரு மெயில் தான் அனுப்பினேன். ஏ.ஆர்.ரஹ்மான் உடனே வருவதாக ஒப்புக்கொண்டார்” என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer