Friday, December 27, 2013

ஜில்லா திரைப்படத்தில் விஜய்யின் கெட்-அப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட, சமீபத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

பொதுவாகவே எந்த திரைப்படத்திலும், அதில் நடித்தவர்களின் பெயரைப் போடும்போது, பல நூறு படங்களில் நடித்த சீனியர் நடிகர்கள் இருந்தாலும் ஹீரோவின் பெயரை தான் முதலில் போடுவார்கள்.

ஆனால் ஜில்லா திரைப்படத்தில் நேசன் மோகன்லாலிடம் முதலில் உங்கள் பெயரை போடலாமா? விஜய் பெயரை போடலாமா? எனக் கேட்டபோது, விஜய் தான் ஹீரோ விஜய் பெயரை போடுங்கள் என்று சொன்னாராம் மோகன்லால். ஆனால் விஜய் அதை கண்டிப்பாக மறுத்து, 35 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் சீனியர் நடிகரின் பெயர் தான் முதலில் வரவேண்டும்” என்று கூறிவிட்டாராம். விஜய்யின் இந்த பணிவான நடவடிக்கையைப் பற்றி அறிந்த திரையுலகம் விஜய்யின் பணிவைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer