Sunday, December 29, 2013

கொட்டுவேன்... அதுவும் கூரையை பிய்ச்சுகிட்டுதான் கொட்டுவேன் என்றால் அந்த அதிர்ஷ்டத்திற்கு என்ன பெயர் வைப்பது?

பீட்சா படத்திற்கும் அப்படத்தின் ஹீரோவான விஜய் சேதுபதிக்கும் அப்படியொரு அதிர்ஷ்டம் கொட்டியிருக்கிறது. இந்தியாவில் தயாராகும் படங்களுக்கு இத்தாலியில் கொடுக்கப்படும் விருதுதான் ரிவர் டூ ரிவர். இந்த விருதை பெற்றிருக்கிறது பீட்சா. புளோரன்ஸ் இந்தியா பிலிம் பெஸ்டிவெல் 2013 என்ற திரைப்பட விழாவில் வழங்கப்படும் இந்த விருது அதிக பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெருமை மட்டுமல்ல, பணமும்....

அந்த விழாவுக்கு வந்திருந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட ஆசைப்பட்டிருக்கிறாராம். இப்படி ஆங்கிலத்தில் வெளியாகும் படங்களுக்கு வெறும் தயாரிப்பாளருக்கு மட்டும் ஒரு தொகையை கொடுத்துவிட்டு படமாக்குவது வழக்கமில்லையாம். படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாருக்குமே பெரும் தொகையை வெட்டுவார்களாம். இது டாலரில் தரப்படுவதால், இந்திய பண மதிப்புக்கு எக்கச்சக்கமாக கிடைக்கும் என்கிறார்கள்.

இப்பவே எத்தனை கோடி கேட்கிறீங்க என்று விஜய் சேதுபதியை ரவுண்டு கட்டி வருகிறது தமிழ்ப்படவுலகம். இதில் அவருக்கே தெரியாமல் ஒரு தொகை அவரை ரவுண்டு கட்டினால் அது எவ்வளவு பெரிய சந்தோஷம்? அனுபவிங்க ராசா...

0 comments :

Post a Comment

 
Toggle Footer