Saturday, December 21, 2013

வீரம் படத்தின் பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்க படத்தின் இறுதி கட்ட பணிகள் துரித வேகத்தில் முடிவடைந்து வருகிறது.

'ஆரம்பம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அஜித் நடித்துள்ளப் படம் 'வீரம்'. 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் 'தல'யுடன், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா, அப்புக்குட்டி என பெரிய நட்ச்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி தயாரித்திருக்கும் இப்படம் வருகிற பொங்கல் ஜல்லிக்கட்டில் 'ஜில்லா'வுடன் களமிறங்க விருப்பது நாம் அறிந்ததே.

எனவே குறித்த நேரத்தில், திட்டமிட்ட படியே படத்தின் முதல் பிரதியை இந்த வார இறுதிக்குள் கொண்டு வர இருக்கிறார் இயக்குனர் சிவா.

படத்தின் சில பகுதிகளை பார்க்க நேரிட்ட சில தொழில் நுட்ப கலைஞர்கள் 'வீரம்' ரசிகர்களை பெருமளவில் கவரும் ஜனரஞ்சகமான பெரிய படம் என படக்குழுவினர் கருதுகின்றனர்.


0 comments :

Post a Comment

 
Toggle Footer