Thursday, December 5, 2013

சாதாரணமாக காதல் கிசுகிசுக்களில் அதிகமாக சிக்கியதில்லை அனுஷ்கா.

இரண்டாம் உலகம் படத்தில் நடித்தபோது, ஆர்யாவுடன் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டார் என்று மட்டுமே செய்திகள் வெளியானது.

மற்றபடி காதல் செய்திகள் வரவில்லை.

ஆனால், அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருக்கும் வேளையில் இப்போது தெலுங்கு நடிகர் ராணாவுடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார் அனுஷ்கா.

அவர்கள் இருவரும கடந்த 6 மாதமாக ராணி ருத்ரம்மா தேவி படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிக நெருக்கம் காட்டி நடிக்கும் அவர்கள், தனிமையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். இதை நட்பு என்று சிலர் சொன்னாலும், காதலாககூட இருக்கும் என்று சிலர் பத்த வைத்துள்ளார்களாம்.

இதனால் இந்த செய்தி ஆந்திராவில் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

எனக்கு பொருத்தமானவரை, பிடித்தமானவரை கண்டுபிடித்து சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்னவே அனுஷ்கா செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ராணா உயரம், உடல்கட்டு என அனைத்து விசயத்திலும் அனுஷ்காவுக்கு பொருத்தமாகவே இருப்பார் என்பதால் இந்த செய்தி பரவி கிடக்கிறதாம்.

ஆனால் இதற்கு முன்பு, இலியானா, ஸ்ரேயா, த்ரிஷா போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ராணா, இப்போது நான்காவதாக அனுஷ்காவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments :

Post a Comment

 
Toggle Footer