Friday, December 27, 2013

உயிர், மிருகம், சிந்து சமவெளி ஆகிய திரைப்படங்களை இயக்கிய சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கங்காறு. கவிப்பேரரசு பாடல்கள் எழுதியுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் நண்பரான இளையராஜா விரைவில் குணமாகிவரவேண்டுமென்று மனம் உருகி வைரமுத்து பேசினார்.

விழாவில் பேசிய வைரமுத்து “இளையராஜா இந்த இசை வெளியீட்டு விழாக்களுக்கெல்லாம், எங்களுக்கெல்லாம் மூலமாக இருந்தவர். தமிழ்நாட்டு பொக்கிஷமாக இன்னும் இருப்பவர். கிராமத்து இசையை உலகத்தின் செவிகளுக்குக் கொண்டு சேர்த்தவர். தமிழ் நாட்டின் இசையை உலகமெல்லாம் இருக்கும் வெள்ளை மாளிகைகள் வரைக்கும் விநியோகித்தவர். அந்த மகாக்கலைஞன் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். அவர் முழுநலம் பெற்று மீண்டும் வந்து இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு இசையமைத்திட வேண்டும் என்று இந்த சபையில் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer