Monday, December 30, 2013

அழகிய தமிழ் மகள் இவள், இரு விழிகளில் எழுதிய மடல்.. ரிக்ஷாக்காரனில் வரும் பாடலில் மஞ்சுளா காட்டிய பாவம் அவருடைய ஆற்றலின் வெளிப்பாடு.

உலகம் சுற்றும் வாலிபன், மன்னவன் வந்தானடி, சாந்தி நிலையம், எங்க தங்க ராஜா போன்ற திரைப்படங்களை எண்ணும்போதெல்லாம் மஞ்சுளா ஒரு சுற்று வந்து போவார்.

நடிகர் விஜயகுமாரை மணம் செய்து அதன் பின்னர் திரையுலக தம்பதிகளாக வந்து அவர் சந்தித்த வரலாறுகள் பல உண்டு.

அவர் பெற்ற மகளே அவருக்கு எதிராக பரப்பிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகி அவர் கலை வாழ்வுக்கு பங்கம் விளைவித்தன.

அவருடைய மருமகன் இயக்கிய சிங்கம் 2 படத்தைப் பார்த்து மகிழ்வடைந்ததே அவருடைய இந்த ஆண்டு வாழ்வின் உச்சக்கட்டம்.

எம்.ஜி.ஆர் – சிவாஜி என்ற இரு பெரும் நாயகர்களுக்கு நாயகியாக நடித்து விடைபெற்றார்.

மஞ்சுளாவின் குரல் திரைக்கு மிகவும் பொருத்தமான குரல், அவரளவுக்கு மற்றைய நடிகைகளுக்கு குரல் வாய்த்ததாகக் கூறமுடியாது.

சாவித்திரி, சரோஜாதேவிக்குப் பின் உரையாடலில் இனிய ஓசை கொடுத்துப் பேசியவர் மஞ்சுளாவே.

நடிகைகளின் வாழ்வு துயரமாக முடியும் இந்திய சினிமாவில் மஞ்சுளாவின் வாழ்வும் அதுபோலவே தொடர்கதையானது.

2013ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் நாயகி ஒருவரை உள்வாங்கிச் சென்றது.


0 comments :

Post a Comment

 
Toggle Footer