Monday, December 9, 2013

‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படம் ‘புறம்போக்கு’. இப்படத்தின் தலைப்பை பெரும் பிரச்சினைகளுக்கிடையே இப்படக்குழு வாங்கியுள்ளது.

இந்த படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸ் வழங்க, எஸ்.பி.ஜனநாதன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் பைனரி பிக்சர்ஸ் மூலமாக முதன்முதலாக தயாரிக்கிறார்.

அடுத்த மாதம் படத்தை துவங்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த படத்தின் போட்டோஷுட் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் படத்தின் கதாநாயகர்களான ஆர்யாவும், விஜய் சேதுபதியும் கலந்து கொண்டனர்.

இந்த போட்டோஷுட்டின் போது விஜய்சேதுபதியிடம் ஆர்யா, படத்திற்கு புறம்போக்கு என பெயர் வைத்திருக்கிறார்கள். இதுல நான் புறம்போக்கா? இல்ல நீ புறம்போக்கா? என கேட்டிருக்கிறார்.

அதற்கு எனக்கும் தெரியல. புறம்போக்கு நான்கூட இருக்கலாம், இல்ல நீங்ககூட இருக்கலாம் என விஜய் சேதுபதி கேட்டுள்ளார்.

இப்படி ஜாலியாக பேசிக்கொண்டிருந்த இவர்களிடம் வந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பொதுமக்களுக்கு பயன்படுகிற எல்லாமும், எல்லோரும் புறம்போக்குதான்.

இப்ப உங்க ரெண்டுபேர்ல யார் புறம்போக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்று சொன்னாராம். இதைக்கேட்டதும் படக்குழுவினர் அனைவருமே சிரிக்கத் தொடங்கிவிட்டார்களாம்.

இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் குலு மணாலியில் தொடங்கவிருக்கிறார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer