Saturday, November 16, 2013

உயிர்வரை இனித்தாய் முக்கிய காமடி பாத்திரத்தில் நையாண்டி மேளம் தயாநிதி..

ஐரோப்பிய வானில் ஜொலித்த நட்சத்திரம் இனி உலக திரைவானில் ஜொலிக்கப்போகிறது..

புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் தெரிந்த கலைஞர் நையாண்டி மேளம் புகழ் தயாநிதி தம்பையாவை மறுக்கத்தான் முடியுமா…?

தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழும் அந்தச் சிறந்த கலைஞன் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் முக்கிய காமடிப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முகபாவனை, உடல்மொழி, வசன உச்சரிப்பால் ஆரம்பித்த உடனேயே ரசிகர்களை குலுங்கிக்குலுங்கி சிரிக்க வைப்பதில் வல்லவர் தயாநிதி அவருக்கு ஐரோப்பா முழுவதும் ரசிகர்கள் உண்டு…

இதுவரை தமிழ் தொலைக்காட்சிகளில் முத்திரை பதித்த தயாநிதி இப்போது வர்த்தக சினிமா உலகிற்குள் காலடி பதிக்கிறார்.

இந்தப் பயணத்தின் மூலம் அவர் திறமை உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டுக்காண்பிக்கப்படும் என்கிறார் திரைப்பட இயக்குனர்.

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் இடைவெளியற்ற கலைப்பயணத்திற்கு சொந்தக்காரர் தயாநிதி.

இப்போது தமிழகத்தின் ரசிகர்களும் தயாநிதியின் காமடியை ரசிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாப்படங்கள் காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் தயாநிதி போன்றவர்களுக்கு மிகப்பெரிய கிராக்கி இருக்கிறது – அதை சரியான இடத்திற்குள் வைக்க வேண்டியது முக்கிய கலைப்பணி.

முழுநீள காதல் காமடியாக உருவாகியிருக்கும் உயிர்வரை இனித்தாயில் தயாநிதியின் காமடிகள் ஓரு மைல்கல்லாக இடம் பெற்றுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் மக்கள் மனங்கவர்ந்த பல காமடி நடிகர்கள் இந்தத் திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள், அதில் முக்கியமானவர்தான் நையாண்டி மேளம் புகழ் தயாநிதி.

முற்றிலும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகி தமிழகம் உட்பட உலகம் முழுதும் பரவி வாழும் திரைப்பட ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமையப்போகிறது உயிர்வரை இனித்தாய்.

இன்றைய தமிழ் சினிமாவின் எதிர்காலமே புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகள் என்றாகிவிட்ட நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரிடையே ஒரு புதிய செய்தியை இத்திரைப்பட முயற்சி விடுத்துள்ளது.

வரும் நாட்களில்…

புலம் பெயர்ந்த கலைஞர்களையும் இணைத்து தமிழ் சினிமா நடைபயில வேண்டிய காலம் கனிந்துவிட்டது..

அந்தவகையில் நடிப்புத்துறையில் நீண்ட, நிறைந்த அனுபவம் கொண்ட புலம் பெயர்ந்த தமிழ்க்கலைஞர்களை தமிழக வர்த்தக சினிமா இணைத்துக் கொள்ள வேண்டியது அதனுடைய வர்த்தகத்திற்கும், பதுமைக்கும் அவசியம் என்பதை இப்போது தமிழகத்தின் கலைஞர்கள் பலர் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

அத்தகைய எண்ணங்களை செயற்படுத்த வசதியாக…

ஐரோப்பிய கலைஞர்களின் கைவண்ணத்தை தமிழக சினிமாத்துறைக்கு அடையாளம் காட்டும்விதமாக உருவாக்கப்பட்டுள்ளது உயிர்வரை இனித்தாய்.

சமீபத்தில் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்த தமிழகக் கலைஞர்கள் பலர் புலம் பெயர்ந்த தமிழ் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

உதாரணமாக உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் பாடிய டென்மார்க் பின்னணிப்பாடகர் ஒருவர் தமிழகத்தின் இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் பாடவுள்ளார்.

இன்றைய தமிழக இளம் காமடி நடிகர்களில் அனுபவத்துடன் ஒப்பிட்டால் மிகப்பெரிய அனுவம் கொண்ட தயாநிதி போன்றவர்களின் ஆற்றல்கள் குடத்துள் விளக்காய் மறைந்துவிடக்கூடாது, குன்றின் மேல் ஏற்றிய தீபமாக மிளிர வேண்டுமல்லவா..

அதற்கு சரியான இடம் வர்த்தக சினிமாதான்..

தமிழக திரைப்படங்களில் தயாநிதி போன்ற அனுபவமிக்க கலைஞர்களை பயன்படுத்துவார்களாக இருந்தால் அந்தத் திரைப்படங்கள் மிகவும் ஜீவனுள்ள படைப்புக்களாக மாறும் என்பதற்கு இரு கருத்துக்கள் கிடையாது.

தயாநிதியின் அபாரத்திறமைக்கு அவர் இருக்க வேண்டிய இடம் வெகு தொலைவில் இருக்கிறது…

அந்த இடத்திற்கு அவர் பறப்பெடுக்க வேண்டிய பருவம் வந்தாகிவிட்டது..

அதற்கமைவாக தன் உயிரைக் கொடுத்து உயிர்வரை இனித்தாயில் அவர் நடித்திருக்கிறார்..

இதுவரை ஐரோப்பிய கலை வானில் மின்னிய இந்த நட்சத்திரத்தை உலகத் தமிழ் திரைப்பட வர்த்தக சினிமாவிற்குள் அழைத்துச் செல்லும் உயிர்வரை இனித்தாய்..

திரைப்படம் முடிவடைந்து இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன.. தயாநிதியின் தோற்றமே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறதல்லவா…

அலைகள்

0 comments :

Post a Comment

 
Toggle Footer