Saturday, November 23, 2013

சமீப காலமாக கோடம்பாக்கத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வரும் செய்தி ரஜினி, அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகும் செய்தி தான்.

மூன்று படங்களில் ஒரு படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறினாலும் அந்த படத்தின் வசூல் அதளபாதாளத்திற்குச் சென்றுவிடும் என்பதால் இந்த பொங்கல் ரிலீஸ் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

ஆனால் இந்த பொங்கல் மோதலில் ரஜினியின் கோச்சடையான் இடம்பெறாது என்று தெரிகிறது. ரஜினியின் கோச்சடையான் பொங்கலுக்கு ரிலீஸாகவில்லை என்றும், கோச்சடையான் தயாரிப்பு டீம் வேறு ஒரு தேதியை தேடி வருவதாகவும் தெரிகிறது.

விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் சில கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்ட கமெர்ஷியல் படங்களாக இருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ரிலீஸ் ஆவதாலும், ரஜினி படங்கள் என்றுமே மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் ரிலீஸாகும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.


0 comments :

Post a Comment

 
Toggle Footer