Friday, November 22, 2013

சென்னையைச்சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் தன்னை ரகசிய வீடியோ எடுத்து மிரட்டுவதாக பிரபல நடிகை எஸ்.ராதா சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் அளித்தார்.

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, கேம், காத்தவராயன், மானஸ்தன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.  இவர் சென்னை கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில்,  திருவல்லிக்கேணியைச் சேந்த வைரவியாபாரியான பைசூல்,  சினிமா தயாரிப்பாளர் என்று அறிமுகம் ஆனார்.  பின்னர் ஆசை வார்த்தை என்னிடம் உறவு வைத்துக்கொண்டார்.

4 ஆண்டுகள் கணவன் - மனைவி போல் வாழ்ந்தோம்.  வைர பிஸினசில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, என்னிடம் 50 லட்சம் வாங்கினார்.  தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் சரியான பிறகு  என்னை திருமணம் செய்துகொள்ளவதாக கூறி ஏமாற்றி விட்டார்.  என்னை அடித்து, மிரட்டி படுக்கை அறைக்காட்சிகளை வீடியோ எடுத்தார்.  இதை வைத்தும் மிரட்டுகிறார், 50 லட்சம் பணத்தை மீட்டுத்தாருங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எஸ்.ராதா செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’நான் வந்து  வைரவியாபாரின்னு அறிமுகம் ஆனார்.  அவர் பெயர் ஷாம் என்று சொனது பொய்.  அவர் ஒரு முஸ்லீம்.  அவர் பெயர் பைசூர்.  அவர் வசிப்பது திருவல்லிக்கேணி.   இவருக்கு ஏற்கனவே 2008ல் திருமணம் ஆகிவிட்டது.   இதைமறைத்து என்னிடம் பழகினார்.  அவருடையை வைரை வியாபாரத்திற்கு என்னிடம் 50 லட்சம் வாங்கினார்.


0 comments :

Post a Comment

 
Toggle Footer